Sunday, August 5, 2012

பாடல் ௨௬


ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான வினோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே 

பாடல் ௨௫


மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றியசே வகனே  

பாடல் ௨௪


கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரந்தர பூபதியே 

பாடல் ௨௩


அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குணபூ தரனே 

பாடல் ௨௨



காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே 

பாடல் ௨௧


கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா சுரசூர விபாடணனே 

Saturday, August 4, 2012

பாடல் ௨௦



அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா வுபதேச முணர்த் தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே