ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியா னைசகோ தரனே
ஆடுகின்ற மயில், வேல், அழகு செய்யும் சேவல் ஆகியவற்றை
பாடுகின்ற பணியையே என் வாழ்க்கை பணியாக அருள்வாய்
நல்லவர்களைத் தேடி கொல்லும் கயமாமுகனை போரிலே
அழிக்கும் ஒப்பற்ற யானைமுகனின் சகோதரனே
ஆடும்பரி = ஆடும் மயில் = ஓங்காரம், பிரணவ சொரூபம் (பரி என்பதற்கு குதிரை என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், ஆடும்பரி என்பது ஆடும்மயிலைக் குறிப்பதாகவே அனைத்து உரையாசிரியர்களும் கொள்கிறார்கள்)
வேல் = ஞானம். இதன் உயர்வை உணர்த்த இதற்கு எந்த அடைமொழியும் தராமல் குறிப்பிடப்படுகிறது.
அணி சேவல் = சூரபத்மனை வென்றதை காட்டும் அலங்கார வெற்றிக்கொடி, சேவற்கொடி.
கயமாமுகன் = கஜமுகாசுரன்.

No comments:
Post a Comment